JaiBhim wins Best Film and Supporting Actor award 12th DadaSaheb Phalke Film Festival

Advertisment

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக்கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள்எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளை வாங்கி குவிந்துள்ளஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் மேலும் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. 12வது தாதாசாகேப் பல்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைஜெய் பீம் பெற்றுள்ளது. அதேபடத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலரும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில்தெரிவித்துவருகின்றனர்.