jai hanuman new update

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக வெளியானது. பின்பு டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாகிவருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா, அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு படத்தை எடுக்கவுள்ளார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் முந்தைய காலகட்டத்தில் நடப்பதை பற்றி இருக்குமென ஹனுமான் படத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

Advertisment

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர், ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம். இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் 3டியில் வெளியாகவுள்ளது. படக்குழு இன்று, ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடுகிறது குறிப்பிடதக்கது.