Skip to main content

''4 பேர் கையில் திரையரங்குகள் உள்ளன...இதை மாற்ற வேண்டும்'' - ஜாக்குவார்தங்கம் வேண்டுகோள் 

Published on 28/08/2019 | Edited on 29/08/2019

'தண்டகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார்தங்கம் பேசும்போது....
 

jaguar thangam

"இங்கே எல்லா படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில்லை. யாரோ 4 பேர் கையில் திரையரங்குகள் உள்ளன. இதை மாற்ற வேண்டும். தமிழக அரசு சிறிய சிறிய திரையரங்குகளை உருவாக்கி எல்லா படங்களையும் வெளியிட ஆவன செய்ய வேண்டும். இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். அப்போதெல்லாம் திரையுலகினர் ஒரு குடும்பம் போல் இருந்தார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இன்று அப்படிபட்ட நட்புறவு இல்லை. இது மாற வேண்டும். எம்ஜிஆர், சிவாஜி விரோதிகள் என மக்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் ஒருவர் வீட்டுக்குச் ஒருவர் சென்று சாப்பிடுவார்கள். உடன்பிறந்த சகோதரர்கள் போல் இருப்பார்கள். இதில் நாயகனாக நடித்த அபிஷேக்கைப் பாராட்ட சக நடிகராக இருக்கும் அஸ்வின் வந்திருப்பது பாராட்டத்தக்கது" என்றார்.
 

sixer

 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜுவைச் சந்தித்த ஜாகுவார் தங்கம்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

egaeg


கரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் முடங்கியுள்ள நிலையில் திரையுலகினர் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் திரைத்துறைக்கு இதுவரை ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை சில கட்டுப்பாடுகளோடு தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
 


இதற்கு நன்றி தெரிவித்த ஃபெப்சி அமைப்பு நேற்று சினிமா படப்பிடிப்புகளை விரைவில் தொடங்க அனுமதி அளிக்க வேண்டி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிய நிலையில் தற்போது தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு, கடம்பூர் ராஜுவை, தலைவர் திரு.ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுகுழு உறுப்பினர்கள் பி. ரங்கநாயக்கலு, பா.ரஞ்சித்குமார், எம்.சி.சேகர், ஜெ.மணிமாறன், டி.நாகலிங்கம், டி.சதாசிவமூர்த்தி, பி.தயாநந்தன் ஆகியோர் சந்தித்து திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியும், மேலும் சிறு படங்களுக்கான மானியம் கொடுக்க புளூரே டிஸ்க், ஹார்ட் டிஸ்க், கட்டணம் செலுத்தும் கால அவகாச தேதியை நீட்டித்து அறிவிக்கவும், மேலும் மானியத்தொகையை உடனடியாக வழங்கி சிறுபடத் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடக் கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 


 

Next Story

''முன்னணி நடிகர்கள் பெப்சிக்கு உதவியது போல் நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும்'' - நடிகர் உதயா வேண்டுகோள்

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


கரோனா தொற்று உலகிற்கே பேரிழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், கலையுலகமும் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கும், பெப்சி போன்ற கலையுலக அமைப்புகளுக்கும் உதவி வருகின்றனர். இந்நிலையில் அமைப்பு சாரா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் உதவும் வகையில், நடிகர் சங்கத்திற்கும் தாராளமாக நிதி வழங்கிடுமாறு நடிகர் உதயா வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்....

 

dgd



''அன்பார்ந்த என் திரையுலக நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் உங்கள் அன்பன் உதயாவின் பணிவான கோரிக்கை.. இன்று கரோனா வைரஸின் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் நிற்பது தாங்கள் அறிந்ததே... உலகப் பிரபலங்களில் பில்கேட்ஸ்லிருந்து நமது நாட்டு அம்பானி, அதானி வரை பலர், பல லட்சம் கோடிகள் இழப்புக்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்று ஊடகத்தின் வாயிலாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.. அதேசமயம் கரோனாவால் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கால் அன்றாடச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் எத்தனையோ பேர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசிக்கும், பட்டினிக்கும் பரிதவிக்கும் பரிதாப நிலையும் இங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்... 

 

இருந்தாலும் அது எந்த அளவுக்குப் போதுமானது என்றே தெரியவில்லை... பல தொழில்களைப் போல் திரைப்படத் தொழிலும் இதில் விதிவிலக்கல்ல. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்குப் பல முன்னணி நடிகர்கள் பல உதவிகளைச் செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. அதேசமயம் முன்னணி நடிகர்கள் செய்திருக்கும் உதவிகள் பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே சென்றடையும். பெப்சி அமைப்பில் சேராத தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 3300 பேரில் 2500 பேர் துணை நடிகர்களாகவும் நாடக நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் படப்பிடிப்பிற்கோ, அல்லது நாடக அரங்கிற்கோ சென்றால் மட்டுமே சம்பளம் கிடைக்கும். அந்த வருமானத்தில் தான் அவர்கள் குடும்பத்தை வழிநடத்த முடியும். இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த ஊரடங்கால்.. துணைநடிகர்களும், நாடக நடிகர்களும் கரோனாவால் ஏற்படும் பாதிப்பை விட பசி பட்டினியால் தான் அதிகம் பாதித்து உள்ளார்கள். 

 

http://onelink.to/nknapp


இந்தச் சூழ்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவிகள் கிடைக்க நடிகர் சங்கத் தனி அதிகாரியின் ஒத்துழைப்பின் பேரில்,திரு ஐசரி கணேஷ், திரு கார்த்தி, திரு நாசர்,  திரு பொன்வண்ணன், திருமதி குட்டிபத்மினி, திரு பூச்சி முருகன், திரு சூரி மற்றும் பல நல்ல  உள்ளம் படைத்த நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற பண உதவி அளித்துள்ளார்கள். அதன்படி வந்திருக்கும் தொகையோ 15 லட்சத்திற்கு தான் இருக்கிறது. அதோடு பலரின் சிறு உதவியால் எங்களால் முடிந்த, கஷ்டப்படும் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு போன்றவற்றை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் அனைவருக்கும் உதவிட பற்றாக்குறை இருக்கிறது. ஆகவே தயவுகூர்ந்து பிரபல முன்னணி நடிகர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்... நடிகர் சங்க உறுப்பினர்களின் பசியைப் போக்க அவர்களின் குடும்பங்கள் பட்டினி இருளிலிருந்து விலக... பெப்ஸி தொழிலாளர்களுக்கு அளித்தது போல் நடிகர் சங்கத்திற்கும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

இப்படிக்கு ,
உங்கள் உதயா'' எனக் குறிப்பிட்டுள்ளார்.