Skip to main content

உலகம் குணமானவுடன் படம் ரிலீஸ்! தனுஷ் டீம் திடீர் அறிவிப்பு!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

hfh

 

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'ஜகமே தந்திரம்' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் இப்படம் (இன்று) மே 1- ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பீதி காரணமாகத் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரைப் படக்குழு பட ரிலீஸ் தேதியாக அறிவித்த இன்று சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ''ஜகம் (உலகம்) குணமான பிறகு விரைவில் திரைக்கு வரும்'' எனப் பதிவிட்டுள்ளனர். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

"தேவையற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்" - பதிவிட்டு நீக்கிய தனுஷ் பட வில்லன்

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

joju george about trolls

 

தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ். பிரபல மலையாள நடிகரான இவர் 'ஜகமே தந்திரம்' அடுத்து 'புத்தம் புது காலை விடியாதா' மற்றும் 'பஃபூன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'இரட்டா' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இந்த நிலையில் ஜோஜு ஜார்ஜ், எந்தக் காரணமும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களை எதிர்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள். நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஆனால் காரணமின்றி என்னைத் துன்புறுத்துவதை நீங்கள் நிறுத்தினால் நல்லது" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி பின்பு நீக்கியுள்ளார். 

 

மேலும் தேவையற்ற பிரச்சனைகளை சமீப காலமாக சந்தித்து வருவதாகவும், தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இவரது இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதேபோல் 'பிரேமம்' படம் மூலம் பிரபலமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், 'கோல்ட்' படத்திற்காக தொடர் எதிர் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோன்று ட்ரோல் பதிவு தொடர்ந்தால் இணையத்தில் நான் இருக்கமாட்டேன் எனக் கடந்த மாதம் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்! 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
jgfugug

 

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், 'மாறன்' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் விரைவில் ஹாட் ஸடார் ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் அத்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.