Skip to main content

(வீடியோ) வெள்ளத்தில் மூழ்கிய ஜாக்கிசான்!!! பதற்றத்தை ஏற்படுத்திய ஷூட்டிங்!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020
jackie chan

 

 

உயிரை பணையம் வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளின் மூலமாக பல ரசிகர்களை சம்பாதித்தவர் ஜாக்கி சான். 

 

ஹாங்காங்கை சேர்ந்த ஜாக்கி சான், தற்போது வான்குவார்ட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காட்டாறு வெள்ளத்தில் நீர் ஸ்கூட்டரில் ஜாக்கி சான் பயணம் செய்வதுபோன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது.

 

இதற்காக அமைக்கப்பட்ட செட்டில் இந்த காட்சி ஷூட் செய்யப்பட்டபோது, ஜாக்கிசான் படத்தின் நடிகையுடன் நீர் ஸ்கூட்டரில் செல்லும்போது, ஸ்கூட்டர் கவிழ்ந்துவிட, ஜாக்கிசான் நீரில் மூழ்கினார். திடீரென காணவில்லை என்றதும் செட்டில் பரபரப்பு உண்டானது. பாறையில் சிக்கியிருந்த ஜாக்கி சானை நீரில் அடித்துசெல்வதற்கு முன்பாக அருகிலிருந்த பாதுகாவலர்கள் விரைந்து வந்து காப்பாற்றினார்கள்.

 

இந்த படத்தின் இயக்குனர் ஸ்டான்லி டாங், ஜாக்கி சான் வெள்ளத்தில் மூழ்கிவிட்டார் என்றதும் பயந்துவிட்டார். பின்னர், ஜாக்கியை பாதுகாவலர்கள் தூக்கியதும், இயக்குனர் ஸ்டான்லி அழுதுவிட்டார். பாதுகாவலர்கள் தூக்கியபோது ஜாக்கி சான், சிரித்த முகத்துடன் வெளியே இருக்கும் பணியாளர்களை பார்த்துள்ளார். 

 

ஜாக்கி சான் வெள்ளத்தில் மூழ்கி, பின்னர் மீட்கப்பட்ட இந்த சம்பவம் முழுவதும் வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சையை கிளப்பும் 'அந்நியன்' ரீமேக்: ஷங்கருக்கு போட்டியாக ஜாக்கிசானை களமிறக்கும் தயாரிப்பாளர் 

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

shankar's anniyan movie remake issue

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், சதா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்நியன்’. படம் வெளியானபோது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்று, நடிகர் விக்ரமிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக்கொடுத்தது. இதையடுத்து, இயக்குநர் ஷங்கர் பல வருடங்கள் கழித்து ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்தார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இப்படத்தை பென் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

 

ad

 

இதனிடையே ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன், கதை உரிமம் தன்னிடம் இருக்கும் நிலையில் தன்னுடைய அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்வது சட்டவிரோதமானது என இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத்தொடர்ந்து, இருவருக்கும் கதை உரிமத்தில் மோதல் எழுந்தது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

இந்நிலையில், ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பிரபல பாலிவுட் நடிகரையும் ஜாக்கி சான் இருவரையும் வைத்து இந்தியில் ரீமேக் செய்யவுள்ளேன். ஜாக்கி சானை பல வருடங்களாக நன்கு தெரியும். கமல் நடிப்பில் நான் தயாரித்திருந்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட அவர் வந்திருந்தார். அடுத்த ஆண்டு ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் பணிகளைத் தொடங்க உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சீன அரசியலில் குதிக்க விரும்பும் ஜாக்கிஜான்!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

jackie chan

 

உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் திரை நட்சத்திரம் ஜாக்கிஜான். 67 வயதான இவருக்கு தற்போது அரசியல் ஆசை வந்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் சீன அதிபர் ஜின்பிங் உரையாற்றியிருந்தார்.

 

இந்தநிலையில், சீன திரைத்துறையினர் சீன அதிபரின் உரை மீதான தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கும் ஜாக்கிஜான், "என்னால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்துவத்தை உணர முடிகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, தான் சொல்வதையும் தான் அளிக்கும் வாக்குறுதிகளையும் 100 ஆண்டுகளில் அல்ல, சில தசாப்தங்களிலேயே செய்கிறது. நான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.

 

ஜாக்கிஜான் கடந்த சில ஆண்டுகளாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்துவருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். 'சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு' என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனைக் குழுவிலும் ஜாக்கிஜான் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.