irfan pathan meets rajinikanth

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

Advertisment

இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisment

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமிதாப் பச்சன் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ள புகைப்படத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர், இர்பான் பதான் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "நம் நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார், ஆனால் இந்த கிரகத்தில் எளிமையான மனிதர். அவரை சந்தித்தது ஒரு சிறந்த கற்றல்" என குறிப்பிட்டுள்ளார். இவர் கிரிக்கெட்டை தாண்டி விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.