Skip to main content

'சூர்யா-பாலா' படம் குறித்து வெளிவந்த அந்த தகவல் உண்மையில்லையா? : வெளியான புது தகவல்

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

Is that information about 'Surya-Bala'  movie is not true? : New information released

 

நடிகர் சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதினெட்டு வருடம் கழித்து பாலா படத்தில் நடிக்கும் சூர்யா,  இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வந்தது.

 

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை ஒரு வேடத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் சூர்யாவிற்கு தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பின்னர் மதுரையில் படப்பிடிப்பு நடத்தி விட்டு விரைவில் படக்குழு கோவா செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

 

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். '2டி எண்டர்டெயின்மெண்ட்' சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சமுத்திரக்கனியால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள்” - பாலா

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
bala speech at Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானி இப்படத்தை இயக்கி உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில்,  இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது பாலா பேசுகையில், “சமுத்திரக்கனி ரசிகனாக இங்கு வந்திருப்பதில் பெருமையடைகிறேன். நடிப்பிலும் தேசிய விருது வாங்கி, இயக்கத்திலும் நிறைய படங்கள் பண்ணி தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டார். அதைத் தாண்டி அவருடைய கடுமையான உழைப்புக்கு ரசிகன். ஒரு நாளைக்கு அரை மணிநேரம் கூட வீணடிக்க மாட்டார்.  

அதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவருக்கு இருக்கிற மனசு பெரியது. அதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர் நடிக்கிற படமாகட்டும் அல்லது அவருக்கு பிடித்த அப்பா மாதிரியான படமாகட்டும் அதை ஊக்குவிப்பதில் அவருக்கு பெரிய மனது இருக்கிறது. இது போன்ற குணம் மட்டும் அவரிடம் தொடர்ந்து இருந்தால் அவரால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள். அதை அவர் விட்டுவிடக்கூடாது” என்றார். 
 

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.