Skip to main content

வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடக்கம்!

 

Indru Netru Naalai

 

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம்  'இன்று நேற்று நாளை'. ஆர்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவிற்கு புதிய கதைக்களமான 'டைம் ட்ராவல்'-லை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்ற தகவல் நீண்ட நாட்களாக வலம் வந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் பணிகள் இன்று (18/01/2021) பூஜையுடன் தொடங்கியுள்ளன.

 

படத்திற்கான கதையை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் எழுத, அறிமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இயக்குகிறார். இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இத்தகவலை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.