'Indian 2' - karthik team up with Kamal for the first time

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுப் போனது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என காஜல் அகர்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு பிரபலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி 90-களின் காலகட்டத்தில் ஹீரோவாக வலம் வந்த கார்த்திக் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் கமலுடன் கார்த்திக் முதல் முறையாக இணையவுள்ளார். இதனிடையே ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் 'ஆர்.சி 15' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு இந்தியன் 2 படத்தின் பணிகளை ஷங்கர் தொடங்கவுள்ளார்.