/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/indini_1.jpg)
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் நேற்று (12-07-24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.
நேற்று வெளியான இப்படம், எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தியன் 2 படத்தில், கமல்ஹாசனின் நடிப்பு பற்றி பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியன் 2 படம் இந்தியா முழுவதும் ரூ. 26 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தமிழில், ரூ.17 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும், இந்தியில் ரூ.1.1 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம்’ படத்தின் முதல் நாள் ரூ.32 கோடி வசூலித்திருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)