நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், சண்டைக்கோழி, சர்கார் உள்ளிட்ட படங்களில் வில்லியாகவும் நடித்தார். தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னி ராசி படத்தில், நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1243.jpg)
இந்நிலையில் கன்னிராசி பட விழாவில் பேசிய வரலட்சுமி, தான் திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)