/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/140_19.jpg)
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு வெளியான ''ஆச்சார்யா' படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்தன. இதனை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கும் 'ஆர்.சி 15' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் உபாசனா காமினேனியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10-ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில் ராம்சரணின் மனைவி உபாசனா காமினேனி ஜக்கியின் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜக்கியுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது உபாசனா, "எனக்கும் எனது கணவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் மக்கள் எப்போதும் எனது ஆர்ஆர்ஆர் (RRR) பற்றி கேள்வி எழுப்பிவருகின்றனர். என் உறவுகள் (Relationship) , எனது பிள்ளை பெற்றுக் கொள்ளும் திறன் (Reproduce), வாழ்க்கையில் எனது பங்கு (Role) ஆகியவற்றை கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னைப் போன்ற நிறைய பெண்களுக்கு இதற்கான விடை தெரிய வேண்டும்" என்றார்.
அதற்கு ஜக்கி, "நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளப் போவதே இல்லை என்றால், நான் உங்களுக்கு விருது தருகிறேன். குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தால் அதை நான் பாராட்டுவேன்" எனப் பதிலளித்துள்ளார். கடந்த ஆண்டு ராம் சரண் ஒரு செய்தியாளர் சந்திப்பில் "நான் இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் எனது இலக்கிலிருந்து விலக வேண்டியிருக்கும். உபாசனாவுக்கும் சில இலக்குகள் இருக்கிறது. அதனால் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)