Skip to main content

"அது எனக்கும் தெரியவில்லை" - தனுஷ் விளக்கம்

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

"I don't know that either" - Dhanush explained in 'the gray man' press meet

 

தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்குகின்றனர். கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் குறிப்பிட்ட திரையரங்குகளில் வருகிற 15-ஆம் தேதியும், நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 22-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் 'தி கிரே மேன்' படக்குழு தற்போது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரூசோ பிரதர்ஸ், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது தனுஷிடம் நீங்கள் எப்படி 'தி கிரே மேன்' படத்தில் இணைந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த தனுஷ், " இந்த படத்தில் எப்படி நான் இணைந்தேன் என்று எனக்கும் தெரியவில்லை. ஒரு நாள் காஸ்டிங் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் ஒரு ஹாலிவுட் படம், மிகப்பெரிய ப்ராஜெக்ட் விரைவில் பதில் கூறுங்கள் எனத் தெரிவித்தனர். பின்பு படத்தைப் பற்றிய முழு தகவல்களை கூறுங்கள் என்று கேட்டேன், சொன்னார்கள். கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்" எனப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.   

 


 

சார்ந்த செய்திகள்