Skip to main content

தமிழ் சினிமா உலகம் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் 

Published on 07/04/2018 | Edited on 09/04/2018
film industry protest


தமிழ் நாட்டில் ஒரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் தயாரிப்பாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் சினிமா துறை முடங்கியுள்ளது. இப்படி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தற்போது நடிகர் ,நடிகைகள் மற்றும் மொத்த சினிமா துறையினரும் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் போராட்டம் நடத்துகிறார்கள். காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த கண்டன அறவழி போராட்டம் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நடிகர் சங்கம் சார்பாக கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.  ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்க விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளும் போராட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து இந்த போராட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போராட்டத்தின் முடிவில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

3 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல், இந்த முறை 6 மாதங்கள் தாமதமாக இன்று (23.06.2019) நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...

 

actor Parthiepan speech about election

 

“எனக்குத் தெரிந்து இரண்டு அணியினரும் நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படுறாங்க, இரண்டு பேரும் நடிகர் சங்க கட்டிடத்தை உடனே கட்டவேண்டும் என நினைக்குறாங்க. எனக்கு கட்சி பாகுபாடு எதுவும் இல்லை, யார் வெற்றிப்பெற்றாலும் எனக்கு சந்தோஷம்தான்.  ஆனால், இன்று படப்பிடிப்பிற்காக மும்பை செல்வதற்கு எனக்கும் என் அசோஷியேட் டிரேக்டருக்கும் ஃப்லைட் டிக்கெட் எடுத்திருந்தோம், திடிரென தேர்தல் வைத்ததால், அந்த டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டு வந்தோம், அதனால், எனக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஆனது. என்னைப் போல எல்லோரும் இப்படி வரமுடியுமா? ஏன் இந்த குழப்பம் என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. 
 

நான் இப்போது விழுந்தடித்து ஓடி வருகிறேன், எல்லோரும் இப்படி வருவார்களா என்று தெரியாது. நமக்கு இதில் என்ன முக்கியத்துவம் என்று நினைப்பார்கள். எதற்கு இந்த போட்டிகள், தேர்தல் முடிந்ததும் எல்லோரும் கூடித்தான் வேலை செய்வோம். ஒரு அமைப்பாக இருக்கிற நாம் நமக்குள் பேசி முடித்திருக்கலாம், இந்த தேர்தலே எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது”. என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

 

 

 

Next Story

நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டி!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசரை எதிர்த்து இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் போட்டியிட இருக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளது.

 

Bhagyaraj to contest against naaser

 

அதேபோல் இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர்கள் பதவிக்கு நடிகர் உதயா மற்றும் குட்டிபதமினி ஆகியோர் போட்டியிட இருக்கின்றனர்.