hip hop aadhi new movie update

கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவாக மாறினார். அப்படத்தை இயக்கியதோடு இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருந்தார். பின்பு கதாநாயகனாக மட்டும் நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் சிவக்குமாரின் சபதம் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் தயாரித்தும் இருந்தார்.

Advertisment

இவரது நடிப்பில் கடைசியாக பி.டி.சார் படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை நடிப்பதோடு இயக்கியும் உள்ளார். அதோடு தயாரித்தும் உள்ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

இப்படத்திற்க்கு ‘கடைசி உலகப் போர்’ எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஆதி, இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment