/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_52.jpg)
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே. இவர் தமிழில் கமல்ஹாசனின் 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். மேலும் மராத்தி, இந்தி,தெலுங்குஉள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானார். கடந்த 5 ஆம் தேதி புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. சிறுநீரகம், இருதயம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை கோமா நிலைக்குச் சென்றதாகச் சொல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை இரவு விக்ரம் கோகலே காலமானதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகின. பின்புவிக்ரம் கோகலே மனைவி, கணவர் இறந்ததாக வெளியான செய்தியை மறுத்தார். மேலும், விக்ரம் கோகலே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால்அவருக்கு பல உறுப்புகள் செயலிழந்துள்ளதால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்ரம் கோகலே (77) இன்று காலமாகியுள்ளார். அவரதுஇறுதிச் சடங்குகள் மாலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு அக்ஷய் குமார் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது இரங்கலைத்தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)