abhay deol

கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர் போலீஸாரால் கழுத்து நெருக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான அரசின் அமைப்பை எதிர்த்து மக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ளது. இதையொட்டி #blacklivesmatter என்ற ஹாஷ்டேக் பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்திய பிரபலங்களும் இந்த ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து ஒரு நீண்ட பதிவைப்பதிவிட்டுள்ளார் 'ஹீரோ' பட வில்லன் அபய் தியோல், “ #migrantlivesmatter #poorlivesmatter #minoritylivesmatter என்ற வார்த்தைகள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த தியோல், "இப்போது இதற்கான நேரம் வந்திருக்கிறது என நினைக்கிறேன். தற்போது விழித்துக்கொண்ட இந்தியப் பிரபலங்களும், நடுத்தர வர்க்க மக்களும், ஒற்றுமையாக நின்று அமெரிக்காவில் இருக்கும் அமைப்பு ரீதியான இன வெறிக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் அது தங்களின் வீட்டுக்குப் பின்னாலும் எப்படி உருவெடுத்துள்ளது என்பதையும் அவர்கள் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.

Advertisment

அமெரிக்க உலகுக்கு வன்முறையை ஏற்றுமதி செய்துள்ளது. உலகை ஆபத்தான இடமாக மாற்றியுள்ளது. இது தவிர்க்க முடியாதது. கர்மா ரீதியாக அது அவர்களுக்கே திரும்பி வர வேண்டியதுதான். அவர்கள் இப்படிக் கஷ்டப்பட வேண்டியவர்கள் தான் என்று நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக நடப்பதைப் பார்த்துக் கணக்கிடுங்கள் என்கிறேன்.

உங்கள் நாட்டில் இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சனைகளைச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்கிறேன். ஏனென்றால் எல்லாம் ஒன்று போலத்தான் தெரிகிறது. அவர்கள் முன்னெடுப்பைத் தொடருங்கள். அவர்களின் நடவடிக்கைகளை அல்ல. உங்கள் சொந்த நடவடிக்கையை உருவாக்குங்கள், இயக்கத்தை உருவாக்குங்கள், உங்கள் தேசத்துக்குச் சம்பந்தமான ஒன்றை உருவாக்குங்கள். அதைப் பற்றியதுதான் #blacklivesmatter என்ற இயக்கம். பரந்து யோசித்தால் நாம் - அவர்கள் என்பதே கிடையாது. நமது கிரகமே ஆபத்தில் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment