Skip to main content

'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை! சுகாதாரத் துறை நோட்டீஸ்!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021
dsgds

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வரும் 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீசர் கதாநாயகன் யாஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 8ஆம் தேதி வெளியானது. 'கே.ஜி.எஃப் 2' டீசர் இதுவரை 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்த டீசரில் ஒரு பெரிய துப்பாக்கியால் ஜீப்புகளைச் சுட்ட பின்பு முழுமையாகக் குண்டுகள் காலியானவுடன் அந்தத் துப்பாக்கியின் முனையில் ஏற்பட்ட கங்கில் சிகரெட்டைப் பற்றவைப்பார் யாஷ். இந்தக் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்த காட்சிக்கு கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. 


இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தின் 5-வது பிரிவை மீறிய செயல் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, இந்த டீசரை இணையத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காட்சி குறித்து படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 'கே.ஜி.எஃப் 2' படத்தில் இந்தக் காட்சிகள் இடம் பெறலாம் என்றும், ஆனால் அந்தக் காட்சிகளில் புகையிலை எச்சரிக்கை வாசகம் வர வேண்டும் என்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் ஈடுபடுவோரிடம் தாங்கள் கூறப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும் இது தொடர்பான கடிதத்தை இயக்குநர் பிரசாந்த் நீல், நடிகர் யாஷ், தயாரிப்பாளர் விஜய் கிராகண்டூர் ஆகியோருக்கு சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதுபோன்ற சோகமான சம்பவங்கள் பயம் கொள்ள செய்கிறது” - யஷ் வருத்தம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
yash visited 3 fans passed away while his birthday celebration

கே.ஜி.எஃப் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற கன்னட நடிகர் யஷ். நேற்று அவரது பிறந்த தினத்தை, கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், பட்டாசு, கேக் வெட்டுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சரங்கி கிராமத்தில், இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முற்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த கட் அவுட்டை நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த பேனர், மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரச, அதிலிருந்து மின்சாரம், கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே ஹனுமந்த் (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான மூவரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, யஷ் அந்த உயிரிழந்த ரசிகர்களின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீங்கள் முழு மனதுடன் எங்கிருந்து வாழ்த்தினாலும் அதுவே சிறந்த வாழ்த்தாக அமையும். இதுபோன்ற சோகமான சம்பவங்கள் எனது பிறந்தநாளையே கொண்டாட பயம் கொள்ள செய்கிறது. இப்படி காட்டுவது மனப்பான்மை அல்ல. தயவு செய்து உங்கள் அன்பை இப்படி காட்டாதீர்கள். பேனர்கள் வைக்காதீர்கள், பைக் சேஸ்கள் செய்யாதீர்கள், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்காதீர்கள். என்னை ரசிப்பவர்களும் என்னுடைய ரசிகர்களும், என்னைப் போலவே வாழ்க்கையில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம்.

நீங்கள் என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்து மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுங்கள். உங்கள் குடும்பங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே. அவர்களைப் பெருமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருங்கள். எனது ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தி பிரபலமடைவதில் எனக்கு விருப்பமில்லை. என் ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்வதை எப்போதும் குறைத்துக் கொள்வேன். நீங்கள் என்னை மதிக்கிறீர்கள் என்றால், முதலில் பொறுப்பாக இருங்கள். இந்த ஆண்டு, கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை. நம் முடிவில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதனால் தான், அதை எளிமையாக வைத்து, குடும்பத்துடன் மட்டும் கொண்டாட முடிவு செய்தேன்,'' என்றார். பின்பு உயிரிழந்த குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் உறுதி அளித்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து நலம் விசாரித்தார். 

Next Story

யஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் - பரிதாபமாக உயிரிழந்த ரசிகர்கள்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
yash fans passed away in birthday celebration

கே.ஜி.எஃப் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற கன்னட நடிகர் யஷ், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், பட்டாசு, கேக் வெட்டுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சரங்கி கிராமத்தில், இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முற்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவில், அந்த கட் அவுட்டை நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த பேனர், மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரச, அதிலிருந்து மின்சாரம் கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் பாய்ந்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே ஹனுமந்த (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பலியான மூவரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.