/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/338_4.jpg)
90ஸ் குழந்தைகளின் ஃபேவரட் திரைப்பட லிஸ்டில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் ஹாரி பாட்டர். 7 நாவல்களை அடிப்படையாக கொண்டு இதுவரை மொத்தம் 8 பாகங்களாக திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கு இன்றும் உலக அளவில் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.
இந்த ஹாரி பாட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹாக்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் ரூபி கால்ட்ரனி. ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர் சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நடிகர் ரூபி கால்ட்ரனி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். இவருக்கு 72 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ரூபி கால்ட்ரனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரூபி கால்ட்ரனி, எட்டு ஹாரி பாட்டர் படங்களிலும் சிறுவன் மந்திரவாதிக்கு வழிகாட்டியாகவும் நண்பராகவும் நடித்து பிரபலமானார். இது போக ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் 'கோல்டன் ஐ' மற்றும் 'தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப்' உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக ஹாரிபாட்டர் 20வது ஆண்டுவிழா திரைப்படத்தில்நடித்திருந்தார்என்பது நினைவுகூறத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)