/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/161_20.jpg)
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணம் ஒரு நிகழ்ச்சியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் வருகிற 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் டீசர் முன்னதாக வெளியான நிலையில், தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கு வந்த பிரச்சனைகள் அனைத்தையும் எப்படி சமாளித்தார்கள் என்பது பற்றி ஒரு முழு பார்வையாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி பேசுகையில், “சிறுவயதிலிருந்தே எனக்கு என்னுடைய திருமணம் பற்றிய கனவு நிறைய இருந்தது. எனக்கும் சோஹேலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தபோது, ​​எனது முழு குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.எனது கனவுகள் நனவாகவுள்ளது என்பதை உணர்ந்தேன். திருமண நாளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் பத்திரமாக பொக்கிஷப்படுத்தவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.எனவே முழு நிகழ்வையும் படமாக்க முடிவு செய்தோம்.
ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோகோட்டை மற்றும் அரண்மனையில் தான் திருமணம் நடந்தது.இது என்னுடையகனவு ஸ்தலம்.எனது கனவு திருமணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் திட்டமிட்டு முடிக்க ஆறு வாரங்கள் ஆனது. அதுஒரு ரோலர் கோஸ்டர் பயணமாக இருந்தது. அந்த ஆறு வாரங்களில் நாங்கள் சிரித்தோம், அழுதோம், சண்டையிட்டோம்.ஆனால், இறுதியில் ஒரு விசித்திர மாயாஜாலமாக என் கனவு திருமணம் நடந்தேறியது. எனது மகிழ்ச்சியை; அந்த இனிமையான தருணங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)