Skip to main content

மீண்டும் இணையும் 'மஹா' பட ஜோடி

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Hansika Motwani to reunite with Silambarasan in new film

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல பிரச்சனைகளைத் தாண்டி நேற்று (25.11.2021) திரையரங்கில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனிடையே நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும் ‘மஹா’ என்ற படத்தில் நடித்துவந்தனர். சில பிரச்சனைகளால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

 

ad

 

இந்நிலையில், நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும்  மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு சிம்பு - ஹன்சிகா நடிக்கும் படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்தில் டாப்சி நடிப்பில் இந்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 'ராஷ்மி ராக்கெட்' படத்திற்கு இயக்குநர் நந்தா பெரியசாமி கதை  எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியேறும் டாப் நடிகர் - உள்ளே வரும் சிம்பு; கமல் படத்தில் மாற்றம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
simbu will replace dulquer salman in thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ் கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லபபடுகிறது. மெலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவருக்கு பதில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தக் லைஃப் படத்திலும் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார். முன்னதாக செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஹன்சிகாவைக் காப்பாற்றி கைகொடுத்ததா? - ‘கார்டியன்’ விமர்சனம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
hansika motwani Guardian movie review

வாலு, ஸ்கெட்ச் படங்கள் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநர் பட்டியலில் இணைந்த விஜய் சந்தர், முதல்முறையாக தயாரித்திருக்கும் திகில் திரைப்படம் கார்டியன். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகு நடிகைகள் கதையின் முதன்மைப் பாத்திரமாக நடிக்கும் பாணியை பின்பற்ற ஆரம்பிப்பார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் முன்னாள் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி. விஜய் சந்தர் முதல்முறையாக தயாரித்திருக்கும் இப்படத்தில் கதையின் முதன்மைப் பாத்திரமாக களம் இறங்கி இருக்கிறார். இந்த புதிய கூட்டணி வெற்றிக்கனியை பறித்ததா, இல்லையா?

சிறுவயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாத நபராக வளர்கிறார் நாயகி ஹன்சிகா மோத்வானி. இவர் தொட்ட காரியம் எதுவும் துலங்கவும் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் ஹன்சிகா வேலை தேடி சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு ஒரு ரத்த காவு வாங்கும் படியான ஒரு சிறிய விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தின் மூலம் அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இதுவரை அதிர்ஷ்டமே இல்லாமல் வளர்ந்து வந்த ஹன்சிகா, இனி அவர் நினைக்கும் அனைத்து விஷயங்களும் அப்படியே நடக்கும் படியாக சக்தி அவருக்கு கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு அவர் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கிறார். அவருக்கு நினைத்த வேலையும் கிடைத்து விடுகிறது. வாழ்க்கையும் சந்தோஷமாக செல்லும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஹன்சிகாவுக்கு பாதகமான சில விஷயங்களில் அந்த சக்தியால் நடக்கிறது. அதன் பின் அவருக்கு பேய் பிடித்து விடுகிறது. இதையடுத்து இந்த சக்தியால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகும் ஹன்சிகா அதிலிருந்து மீண்டாரா, இல்லையா? அவருக்கு கிடைக்கும் சக்திக்கு பின்னால் இருக்கும் கதை என்ன? பேயிடம் இருந்து அவர் விடுபட்டாரா, இல்லையா? என்பது கார்டியன் படத்தின் மீதி கதை.

hansika motwani Guardian movie review

தமிழ் சினிமாவில் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அதே அரதப்பழசான பேய் கதையை கொண்ட பட பட்டியலில் இந்த படமும் இணைந்து இருக்கிறது. ஒரு அப்பாவி நபரை வில்லன்கள் சில காரணங்களுக்காக போட்டு தள்ளி விடுகின்றனர். அந்த அப்பாவி பெண் எப்படி பேயாக மாறி தன்னை கொலை செய்தவர்களை பழி வாங்கினார் என்ற ஏற்கனவே பல ஆண்டு காலமாக அடித்து துவைத்த கதையை வைத்துக் கொண்டு அதில் திகில் காட்சிகளை உட்புகுத்தி அதன்மூலம் பயமுறுத்தி ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர்கள் சபரி - குரு சரவணன். படத்தின் முதல் பாதி ஹன்சிகாவுக்கு தொட்டது எதுவும் துலங்காமல் ராசி இல்லாத நபராக அவர் படும் துன்பங்களை அழகாக காட்சிப்படுத்தி அதன் மூலம் ரசிக்க வைத்த இயக்குநர்கள் இரண்டாம் பாதியில் பேய் கதையை உள்ளே கொண்டு வந்து கிளிஷேவான காட்சிகள் மூலம் அயற்சி உடன் கூடிய படமாக இப்படத்தை கொடுத்து முடித்திருக்கிறார். முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி எங்குமே புதியதாக எதுவும் இல்லாமல் மிகவும் பிளாட்டாக சென்று முடிகிறது. பேய் அல்லாத முதல் பாதி ஓரளவு ரசிக்கக்கூடியதாக அமைந்து படத்தை தாங்கிப் பிடிக்க முயற்சி செய்து இருக்கிறது. பேய் படத்துக்கே உரித்தான பயமும் பயங்கரமும் அதிரி புதிரியாக இல்லாமல் உப்பு சப்பு இன்றி இருப்பது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. 

hansika motwani Guardian movie review

படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானி அவருக்கான வேலையை செவ்வனே செய்து விட்டு சென்றிருக்கிறார். தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை நிறைவாக கொடுத்து காட்சிகளுக்கு உயிரூட்ட முயற்சி செய்து விட்டு சென்று இருக்கிறார். இந்த படத்திற்கு இவருடைய ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் சற்று பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது. வழக்கமான வில்லன்களாக வரும் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் வழக்கமான வில்லத்தனம் காட்டி பயமுறுத்த முயற்சி செய்திருக்கின்றனர். காமெடிக்கு பொறுப்பேற்று இருக்கும் மொட்டை ராஜேந்திரனும், டைகர் கார்டன் தங்கதுரையும் அவ்வப்போது சிரிப்பு காட்ட எவ்வளவோ முயற்சி செய்தும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. படத்தின் நாயகனாக வரும் பிரதீப் ராஜன் கடமைக்கு வந்து செல்கிறார். ஃபிளாஷ் பேக் காட்சியில் வரும் நடிகையும், குழந்தையும் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். 

சக்திவேல் ஒளிப்பதிவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சாம் சி எஸ் இசையில் பாடல்கள் வழக்கம் போல் சுமார். பின்னணி இசை எப்போதும் போல் வெறும் இரைச்சல் ஆன சத்தம் மட்டுமே கேட்கிறது. ஹன்சிகா போன்று முன்னணி நடிகையை வைத்துக்கொண்டு படத்தை எடுக்கும் இயக்குநர்கள் வழக்கமான கதை அமைப்புகள் இல்லாமல் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும் பட்சத்தில் அவை வெற்றிக்கனியை பறிக்கத் தவறியதில்லை. ஆனால் வழக்கமான கதை அமைப்புகளை வைத்துக்கொண்டு, வழக்கமான காட்சி அமைப்புகளோடு கொடுக்கும் படங்கள் பெரும்பாலும் சோடை போவதில்லை. இதில் கார்டியன் இரண்டாவது ரகம்.

கார்டியன் - உப்பு சப்பு குறைவு!