Skip to main content

"மிகவும் உற்சாகமாகவும், கொஞ்சம் பதற்றமாகவும் இதை வெளியிடுகிறேன்.. ஹன்சிகா ஓபன் செய்த சர்ப்ரைஸ்!!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

மஹா படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா. நேற்று காலையில் ஹன்சிகா தனது ட்விட்டரில் உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். அதன்பின் நேற்றிரவு ஏழு மணிக்கு அந்த சர்ப்ரைஸ் என்ன என்று தெரிவித்தார் ஹன்சிகா.

  hansika


அது என்ன என்றால், ஹன்சிகா சொந்தமாக யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். மேலும் அந்த சேனலில் தன்னுடைய முதல் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அண்மையில் ஹன்சிகா ரியாக்‌ஷனில் ஜிஃப்ஸ் (GIF) வெளியிடப்பட்டன. அந்த ஷூட் உருவாக்கத்தைதான் முதல் வீடியோவாக பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.

அந்த அறிவிப்பு பதிவில், "மிகவும் உற்சாகமாக மற்றும் கொஞ்சம் பதற்றமாகவும் என்னுடைய யூடியூப் சேனலை வெளியிடுகிறேன். என்னுடன் சேர்ந்து என்னுடைய வாழ்க்கையையும், என் உண்மையான பக்கத்தையும் அறிந்துகொள்ள தயாராக இருங்கள்" என ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

1000 அடியில் பேனர்; காவல்துறை கண்டிப்பு - சிம்பு ரசிகர்கள் அட்ராசிட்டி

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

Thousand Feet banner for simbu maha movie

 

ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘மஹா’. ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தை 'எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியானது.  இப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதையொட்டி அவரது ரசிகர்கள் மகா படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மதுரை குருவிக்காரன் சாலை மேம்பாலத்தின் மீது மதுரை சிட்டி எஸ்.டி.ஆர் வெறியர்கள் என்ற பெயரில் 1000 அடி நீளத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அனுமதி இல்லாமல் 1000 அடியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதை  அடுத்து காவல்துறையினர் கண்டித்தனர். அதன் பிறகு அந்த பிளக்ஸ் பேனர் நீக்கப்பட்டது. இருப்பினும் பிளக்ஸ் பேனரை அகற்றுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

 

Next Story

"இது வருத்தம் அல்ல, ஏமாற்றம்"- நடிகை ஹன்சிகா

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

hansika motwan talk about maha film

 

இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா 'மகா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்க, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இது நடிகை ஹன்சிகாவின் 50வது படமாகும். எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  கடந்த ஆண்டே இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக 'மகா' படத்தின் வெளியீடு தடைபட்டுப் போனது. 

 

இந்நிலையில் 'மகா' படம் குறித்து பேசிய ஹன்சிகா," இது என்னுடைய 50 வது படம். 'மகா' வெளியாக தாமதமாவது வருத்தம் என்று கூறமாட்டேன். அதே சமயம் பாடம் வெளியாக இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சீராகி 'மகா' படம் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.