குக்கூ, ஜோக்கர் என இரு படங்களை தொடர்ந்து ஜிப்ஸி என்னும் படத்தை இயக்கியுள்ளார் ராஜூ முருகன். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்கின்றனர். இன்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த படத்தை அம்பேத் குமார் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டீஸரை பார்க்கும்போதே இது ஒரு அரசியல் படம் என்பதை உணர்த்தியது. இந்நிலையில் ட்ரைலரில் முழுக்க முழுக்க தற்போதைய அரசியல் பேசப்பட்டுள்ளது தெரிகிறது.