சென்னை லயோலா கல்லூரியின் விஸ்காம் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இயக்குனர் கெளதம் மேனன் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/enpt - Copy.jpg)
"இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு முன்பாக பல முக்கிய கலைஞர்கள் பங்கேற்றார்கள் என்பதை அறிந்தேன். இயக்குனர் பால்கி, ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நான் வியந்து போற்றும் கலைஞர்கள். கமல்ஹாசனின் பெரும் ரசிகன் நான். ஆனால், அவர் இப்போது முற்றிலும் வேறுபட்டஒரு துறையில் கால் பதித்துள்ளார். அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். அவரை வாழ்த்த எனக்கு தகுதி இல்லை. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அவரை ஒரு நடிகராகத்தான் பார்க்க விரும்புகிறேன்" என்று தனது பேச்சைத் தொடங்கிய கெளதம் மேனன், மாணவர்கள் தாங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கும்படி கேட்டுக்கொண்டார். மாணவர்களின் பிற கேள்விகளுக்கும் கலகலப்பாகவும் தன்னுடைய ஸ்டைலிலும்பதிலளித்த கௌதம், வேல்யூ ஆடட் தகவலாக தன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 15ஆம் தேதி கண்டிப்பாக வெளிவரும் என்று தெரிவித்து மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்திச்சென்றார் கெளதம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)