good response vikram ott release

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற படம் விக்ரம். இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட சில நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. திரையரங்குகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து பிரபல ஓடிடி தளமானஹாட்ஸ்டாரில் வெளியாகி அதிலும்நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் விக்ரம் படம் குறித்து ஹாட் ஸ்டார் தரப்பில் கூறியதாவது, "உலகெங்கிலும் உள்ள பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற பிறகு, டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் விக்ரம் படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்வையாளர்கள் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தனித்தனியே கொண்டாடி, பாராட்டி வருகின்றனர். இப்படம் தேசிய அளவில் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெளியீடாக அமைந்தது. கமல்ஹாசன் போன்ற ஒரு நட்சத்திரம் மீது பார்வையாளர்கள் இதயத்தில் வைத்திருக்கும் உண்மையான அன்புக்கு இதுவே சாட்சி. விக்ரம் படத்தினை இன்னும் அதிகமான பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment