/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/365_10.jpg)
தமிழ் சினிமாவில் தனது அயராத உழைப்பால் தேர்ந்த நடிகராகவும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வபோது தனது கருத்தை வெளிப்படையாக முன்வைத்து தனித்துவம் வாய்ந்த நபராக இருக்கிறார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்து வரும் கங்குவா படக்குழு, சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படத்தின் முதல் பாடலான ‘ஃபயர்’ பாடலை வெளியிட்டது. இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் இன்னும் பெயரிடாத படத்தில், வாழ்த்து வீடியோ ஒன்று வெளியாகியது. சூர்யாவின் தம்பியான கார்த்தி, “பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினாலும், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகத்தில் அளவில்லா அன்பை பரப்பிவரும் ரசிகர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்” என அவரது எக்ஸ் வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/364_10.jpg)
இதனிடையே சூர்யாவின் ரசிகர்கள், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், அயனாவரம், முகப்பேர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்தார். இதனை வடசென்னை தெற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)