Skip to main content

'காக்கும் காக்கிக்கு வீரவணக்கம்...' - ஜிப்ரான் இசையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பாடல்!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

ghibran

 

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்நாளை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் வீரவணக்கம் என்ற ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். தலைமை காவல் அலுவலர் சசிகலா மற்றும் வெஸ்லி இப்பாடலுக்கான வரிகளை எழுத, சசிகலாவும் பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பாடலை இன்று வெளியிட்டார்.

 

இப்பாடல் உருவானது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறுகையில், "வீரவணக்கம் பாடல் உருவானதே ஒரு இனிமையான அனுபவம். கரோனோ தொற்று காலத்திற்கு பிறகு, முன்கள பணியாளர்களாக பணியாற்றிய காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில் கமிஷனருடன் இணைந்து ஒரு பாடல் செய்தேன். அவர்களின் பணிச்சூழலையும், தியாகங்களையும் கண்டபோது மனம் அதிர்ந்தது. ஒருவர் பணிக்கு திரும்பும்போது மற்றொருவர் கரோனாவினால் மருத்துவமனைக்கு சென்றார். கரோனாவில் மரணித்தவர்கள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் காவல்துறை பணியில் இருந்தபோதே இறந்தவர்களை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அவர்களை பற்றி கேட்ட ஒவ்வொரு கதையும் என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில் அவர்களுடன் நெருங்கி பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது திருவள்ளூர் காவல்துறை நண்பர் டாக்டர் வருண் குமார் ஐ.பி.எஸ், வீரவணக்க நாளையொட்டி ஒரு பாடல் செய்ய முடியுமா என என்னிடம் கேட்டார். நம்மால் முடிந்த ஒன்றை இவர்களுக்காக செய்ய வேண்டும் என்று நினைத்து உடனே ஒப்புக்கொண்டேன்.

 

இசை வலிகளை மறக்கடிக்கும். அவர்களின் வலிகளுக்கு, தியாகத்திற்க்கு எனது சிறு அர்ப்பணிப்பு இந்த பாடல். மிக குறைவான காலம் இருந்தாலும், மிகச்சிறப்பாக செய்துள்ளோம். பாடல் வரிகளை தலைமை காவல் அலுவலர் சசிகலா, வெஸ்லி இணைந்து எழுதியுள்ளனர். சில வரிகளை சந்தத்திற்கு ஏற்றவாறு நாங்களே மாற்றி அமைத்தோம். பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும், சசிகலாவும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். திருவள்ளூர் காவல்துறை அதிகாரி டாக்டர் வருண் குமார் ஐ.பி.எஸ் அவர்களின் ஈடுபாடுதான், இப்பாடல் சிறப்பாக உருவாக காரணம். அவருக்கு நன்றி. இன்று  வெளியாகியுள்ள இப்பாடலை கேட்டு மகிழுங்கள். நம் உயிருக்காவும் பாதுகாப்புக்காவும் அளப்பரிய பணிகள் செய்யும் காவல்துறையினரை இந்நன்நாளில் போற்றுவோம்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

சைலேந்திரபாபு ஓய்வும் சங்கர் ஜிவால் பதவியேற்பும் (படங்கள்)

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த சைலேந்திரபாபு நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காவல்துறை தலைமையகத்தில் சைலேந்திரபாபு புதிதாகப் பதவியேற்ற சங்கர் ஜிவாலிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

 

இதையடுத்து காவல்துறை சார்பில் அவரை காரில் அமர வைத்து புதிய டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவுக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. காவலர்கள் அணிவகுப்பு நடத்தி சைலேந்திர பாபுவுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சங்கர் ஜிவால் சைலேந்திர பாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கலந்துகொண்டு சைலேந்திரபாபு அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.