gautham menon

Advertisment

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இட்னானி, காயாடு லோகர், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம், செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் கௌதம் மேனன் பேசுகையில், “நதிகளில் நீராடும் சூரியன் என முதலில் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெயமோகன் ஒரு லைன் சொன்னார். ஆனால் அது புது ஹீரோ பண்ணக்கூடிய கதை என்றார். சிம்பு புது ஹீரோ போல் உழைப்பார் என்று அவரிடம் சொன்னேன். சிம்புவிடம் கதை சொன்ன போது ஓகே சொல்லிவிட்டார். ஏ ஆர் ரஹ்மான் முதலில் அந்த கதைக்கு 3 பாடல்கள் தந்திருந்தார். பின் இந்தக்கதை சொன்னபோது புது பாடல்கள் தந்தார். ஐசரி எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். இவர்களால்தான் இந்தப்படம் உருவாகியது. இதில் கதை என்னவென்று எனக்கே தெரியாது.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்தான் படம். எனக்கு இந்தப்படம் ஒரு அனுபவமாக இருந்தது. ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். ஜெயமோகன் இந்தக் கதையை தந்தபோது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப் போவது போல் ஒரு காதலை வைத்துள்ளேன். ரஹ்மானுக்கும் எனக்கும் இடையேயான உறவு மிக அழகானது. இரவு 2 மணிக்கு போன் செய்து கதை சொல்லி பாடல்கள் சொல்லி விவாதிப்பார். அவருடன் வேலை செய்யும் அனுபவமே நன்றாக இருக்கும். படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் பாருங்கள்” எனத் தெரிவித்தார்.