gautham menon debut directorail in malayalam cinema

இயக்குநர் கௌதம் மேனன் சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த அவர், கடைசியாக ‘ஜோஷ்வா இமை போல காக்க’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே கௌதம் மேனன், மலையாள நடிகர் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் ஒரு படம் இயக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது

இந்த நிலையில், கெளதம் மேனன் - மம்மூட்டி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் பூஜையுடன் துவங்கியுள்ளது. மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது தொடர்பான புகைப்படங்களைபடக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

கடைசியாக மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘டர்போ’ என்ற மலையாளப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இயக்கிய கௌதம் மேனன் இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.