Skip to main content

‘உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்’ - கங்குவா படத்தின் அப்டேட் வெளியீடு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Ganguwa Movie Update Release!

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும், இப்படம் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், கங்குவா படத்தை பற்றிய அப்டேட் ஒன்றைப் படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘BRACE YOURSELVES FOR THE KING'S ARRIVAL’ எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு, படம் ரிலீஸுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கின்றன என்பதை அறிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!” - பாடலாசிரியர் விவேகா  

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Lyricist Viveka said he was mesmerized by the movie Kanguva

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். மேலும், இப்படத்தை முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கங்குவா படத்தின் பாடலாசிரியரான விவேகா, இப்படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். 

இது குறித்து முன்னணி பாடலாசிரியர் விவேகா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குநர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த சிறந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமையாக உணர்கிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

பிரசாந்தின் ‘அந்தகன்’ படம்; ஒருவழியாக அப்டேட் கொடுத்த படக்குழுவினர்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
The film crew gave an update on Prashanth's film 'Anthagan

90 காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகாராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் நடித்த படங்களின் தொடர் தோல்வியால், தமிழ் திரையுலகில் காணாமல் போய்விட்டார். இந்த நிலையில், ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை ரீமேக் செய்து அதில் பிரசாந்த் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது.

அதன்படி, முதலில் அந்தகன் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென்று, இப்படத்தை இயக்குநரும், பிரஷாந்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்கினார். மேலும், இப்படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உலகம் முழுவதும் டிஸ்ரிஃபூசன் செய்கிறார். .

நீண்ட தயாரிப்பில் இருந்த இப்படம், எந்தவித அப்டேட்களும் இல்லாமல், வெறும் பண்டிகை நாட்களில் வாழ்த்து போஸ்டர்களை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் பிரசாந்த், தற்போது விஜய் நடிப்பில் உருவாகும், ‘கோட்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.