Skip to main content

"முகத்தில் அடித்து துன்புறுத்தினார்" - தயாரிப்பாளர் மீது விஜயகாந்த் பட நடிகை பகீர் குற்றச்சாட்டு

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

Gajendra movie actress Flora Saini accused one producer

 

தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து விஜயகாந்தின் 'கஜேந்திரா' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை புளோரா சயினி. அதைத் தொடர்ந்து குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட பல்வேறு மொழிகளில் 50 படங்களுக்கு மேலாக நடித்துள்ள புளோரா சயினி வெப்சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  

 

இந்த நிலையில், தான் சிறு வயதில் தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக புளோரா சயினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்ட புளோரா சயினி, "எனக்கு 20 வயது இருக்கும்போது 10 படங்களில் நடித்தேன். மாடலாகவும் நிறைய டிசைனர்களுடன் பணியாற்றியுள்ளேன். அப்போது ஒரு பிரபல தயாரிப்பாளரின் மீது காதல் கொண்டதால் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் என்னிடம் முறைகேடாக நடந்து கொண்டார். 

 

என் முகத்திலும் அந்தரங்க இடத்திலும் அடித்து துன்புறுத்தினார். என்னுடைய போனை பிடுங்கிக் கொண்டு வேலையை விடச் சொல்லி கட்டாயப்படுத்தினார். தொடர்ந்து 14 மாதங்களாக யாரிடமும் பேசவிடாமல் சித்திரவதை செய்தார். பின்பு ஒரு நாள் மாலையில் என் வயிற்றில் குத்தினார். அதன்பின்பு அங்கிருந்து ஓடி வந்து அம்மா, அப்பாவிடம் இருக்க ஆரம்பித்தேன். இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆனது. இப்போது நான் மகிழ்ச்சியாக என் வேலைகளைக் கவனித்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Flora Saini (@florasaini)

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.