
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃப்ரெண்ட்ஷிப்'. முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, படத்தை கோடை விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.