Skip to main content

இந்நாள் தயாரிப்பாளர்களுக்கு முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர்கள் வேண்டுகோள்!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
jljl

 

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா துறை வேலைகள் இன்றுமுதல் சில நிபந்தனைகளுடன் தொடங்க அனுமதியளித்தது தமிழக அரசு. இதைத்தொடர்ந்து திரைப்பட தயாரிப்புக்கு பிந்தைய பணிகளான படத்தொகுப்பு, குரல் பதிவு, விஷூவல் கிராபிக்ஸ் போன்ற பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் கரோனாவால் திரைத்துறைக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய அனைத்து தயாரிப்பாளர்களும் ஒன்று கூட வேண்டி இந்நாள் தயாரிப்பாளர்களுக்கு முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்...


''தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

 

அன்புள்ள தயாரிப்பாளர் நண்பர்களே தற்சமயம் கரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மன ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. நமது சங்கத்திற்கு தேர்தல் தள்ளிப்போகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் இந்த நேரத்தை வீணாக்காமல் நல்ல விஷயங்களை பேசி தீர்வு காண்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் பல அணிகளாக பிரிந்தாலும் திரைத்துறையை சீர்தூக்கி நிலைநிறுத்தும் விஷயத்தில் நாம் அனைவரும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு கண்டு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். நமக்கு உண்டான பிரச்சனையை நாமே ஒருங்கிணைந்து தீர்த்துக்கொள்ள போவதால் இதற்கு நீதிமன்றமோ, நீதிபதியோ, பதிவாளரோ மறுப்பு சொல்லப்போவதில்லை.


நமது சக உறுப்பினர்கள் திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அரசாங்கத்திடமும் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பைனான்சியர்கள் கலந்து பேசி நமது திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரிசெய்து தமிழ் திரைத்துறையும் தயாரிப்பாளர்களும் மன நிம்மதியாக சிறப்பாக செயல்பட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய திரு.பாரதிராஜா, திரு.எஸ் ஏ சந்திரசேகர், திரு.எஸ் தாணு, திரு.கேயார், திரு.டிஜி தியாகராஜன், திரு.முரளிதரன் இவர்களுடன் மேலும் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட இந்த குழு திரைத்துறையில் அனைத்து துறைகளுடனும் கலந்து பேசி நல்லதொரு விடியலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து கீழ்கண்ட குழுவுக்கு ஆதரவும், ஆலோசனைகளையும் நல்கி திரைத்துறை சீறும் சிறப்புமாக விளங்கிட நம் ஒத்துழைப்பினை நல்கிடுவோம்.

 

 

ஒன்றுபடுவோம்...

 

உயர்ந்து நிற்போம்…

 

குழுவினர்:
1. தி௫. டி. சிவா
2. தி௫. ௮ன்பு செழியன்
3. தி௫. ஐசரி கணேஷ்
4. தி௫மதி. கமீலா நாசர்
5. தி௫. கதிரேசன்
6. திரு. எடிட்டர் மோகன்
7. தி௫. ராதாகிருஷ்ணன்
8. தி௫. முரளி ராம நாராயணன்
9. தி௫. சிவசக்தி பாண்டியன்
10. தி௫. பி. எல். தேனப்பன்
11. தி௫. கே. பாலு
12. தி௫. சித்ரா லட்சுமணன்
13. தி௫. சுபாஷ் சந்திரபோஸ்
14. தி௫. சந்திரபிரகாக்ஷ் ஜெயின்
15. தி௫. விஜய முரளி
16. தி௫. சுந்தர். சி
17. தி௫. கே. ராஜன்
18. தி௫. மாதேக்ஷ்
19. தி௫. எஸ். ஆர். பிரபு
20. தி௫. விஜய குமார்
21. தி௫. ஞானவேல்ராஜா
22. தி௫. அ௫ண் பாண்டியன்
23. தி௫. மைக்கேல் ராயப்பன்
24. தி௫. எல் ரெட் குமார்
25. தி௫. சீ. வி. குமார்
26. தி௫. மு௫கன்
27. தி௫மதி. சுஜாதா விஜயகுமார்
28. தி௫மதி. பாத்திமா விஜய் ௮ந்தோணி
29. தி௫. KJR (ராஜேஷ்)
30. தி௫. ராஜா (2D) 
31. தி௫. தி௫மலை
32. தி௫. ஜபக்
33. தி௫. தமிழ் குமரன்
34. தி௫. கஜாலி
35. தி௫. குமார் (சிவாஜி பிலிம்ஸ்) 
36. தி௫. எம். கஃபார்


இப்படிக்கு
முன்னாள் தலைவர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

 

11 . 5 . 2020
சென்னை'' என குறிப்பிட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்