Skip to main content

இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட "வா வரலாம் வா" பர்ஸ் லுக் போஸ்டர்!

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

First look poster release

 

எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் - எஸ்பிஆர் இணைந்து "வா வரலாம் வா"  திரைப்படத்தை இயக்கியுள்ளனர். நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக "மைம்" கோபி நடித்துள்ளனர். 40 குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

 

தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டிங் செய்துள்ளார். 

 

இந்நிலையில், வா வரலாம் வா திரைப்படத்தின் பர்ஸ் லுக்  வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை 'அம்மா டாக்கீஸ்' ஸ்டுடியோவில்  நடைபெற்றது.நிகழ்ச்சியில், இப்படத்தின் கதாநாயகன் பாலாஜி முருகதாஸ், கதாநாயகி மஹானா சஞ்சீவி மற்றும் படத்தின் இயக்குநர்கள் எல்.ஜி. ரவிச்சந்தர் - எஸ்.பி.ஆர், படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா, இயக்குநர் சரவண சுப்பையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை விவரிக்கும் ஜமா

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
jama movie update

அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, நடித்துள்ள படம் ‘ஜமா’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைகளில் பல குழுக்கள் இருக்கும் நிலையில் அதில் ஒரு குழுவினரை 'ஜமா' என அழைக்கின்றனர். அவர்களின் தெருக்கூத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சவால்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற‘ கூழாங்கல்' படத்தை தயாரித்த லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது இயக்குநர் பாரி இளவழகன் பேசுகையில் "நான் தெருக் கூத்தை சார்ந்தவன். என்னுடைய கிராமத்தில் சொந்த பந்தங்கள் பலர் தெருக் கூத்தில் இன்றளவும் நடித்து வருகின்றனர். தற்போது வந்த கலைப் படைப்புகள், தெருக்கூத்தில் நடிப்பவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்படுகிற மாதிரியும், அந்தக் கலை அழிவு நிலையில் இருப்பதாகவும் ஒரு தவறான முன்னுதாரணத்தை சொல்வதுபோல உள்ளது. 

ஆனால் அப்படி யாரும் கஷ்டப்படுவதில்லை. நான் தொடர்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைக் கவனித்து வருகிறேன். படத்தில் அவர்களின் வாழ்க்கை முறையில் எதைப் பற்றி பேச வேண்டுமென்றால், பெண் வேடமிட்டு நடிப்பவர்களை பற்றிதான் பேச வேண்டும், ஏனென்றால் அவர்கள் தான் கிண்டல், கேலிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சில கிராமங்களில் அவர்களின் புடவை இழுத்து பாலியல் துன்புறுத்தலும் ஏற்படுகிறது, அதில் சிலவற்றை மட்டும்தான் படத்தில் காட்சிப்படுத்த முடிந்தது. எந்த அளவிற்கு உண்மையாக அவர்களைப் பற்றி கூறமுடியுமோ அந்த  அளவிற்கு படத்தில் பேசியுள்ளோம்" என்றார்.

Next Story

பலநாள் காத்திருப்பு; விடுதலை 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
viduthalai 2 movie update

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1 வருடத்திற்கு முன்பாக வெளியான விடுதலை முதல் பாகத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள், இரண்டாம் பாகத்தை காண ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (17-07-24) காலை 11:30 மணியளவில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தில், அரிவாளை சுத்தியால் அடிப்பது போல் காட்சியமைத்து, கம்யூனிஸ்ட் சின்னத்தை பிரதிபலிப்பது போல் தெரிகிறது.