/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/378_2.jpg)
'ரங்கா' படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'மாயோன்'. கிஷோர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.த்ரில்லர்ஜானரில்வெளிவந்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை அடுத்து 'ரேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கமலக்கண்ணன் இயக்கத்தில் 'வட்டம்' படத்தில் நடிக்கிறார். 'ட்ரீம்வாரியர்பிக்சர்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா,அதுல்யாஉள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.நிவாஸ்கே பிரசன்னா இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'வட்டம்' படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்வெளியாகியுள்ளது. இந்தபோஸ்டரில்சிபிராஜ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்தபோஸ்டரைசிபிராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் தங்களதுட்விட்டர்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் இப்படம் நேரடியாகடிஸ்னிப்ளஸ்ஹாட்ஸ்டார்ஓடிடிதளத்தில் வெளியாகும்எனப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)