vijay sethupathi

Advertisment

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தபடத்திற்கு ‘800' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

மேலும், இந்த படத்தில் அரசியல் இல்லை என்றும் முரளிதரனின்வாழ்க்கை வரலாற்றைசம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

Advertisment

இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், விஜய் சேதுபதி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதற்காக காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளாட் சீனு ராமசாமி. அதில், “எந்த ஒரு நிர்பந்தமும் அரசியல் வினாக்களை பற்றி கவலை இன்றி ஜனநாயகபூர்வமாக சிந்தித்து மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என உணர்ந்து விஜய் சேதுபதி எடுக்கும் முடிவுக்கு நானும் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.