
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அட்டன்பரோ இயக்கிய படம் 'காந்தி'. கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரபல நடிகர் பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்திருந்தார்.
இந்தப் படம், 'சிறந்த படம்', 'சிறந்த நடிகர்' உள்ளிட்ட எட்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது. இந்தப் படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய பானு அதையாவுக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துள்ள இவர், 91 வயதில் நேற்று காலமானார். இவரின் மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.