Skip to main content

“எனக்கு ஏ.டி.எச்.டி குறைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது” - ஷாக் கொடுத்த ஃபகத் ஃபாசில்

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Fahadh Faasil diagnosed with ADHD

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபகத் ஃபாசில். தனது நடிப்பின் முலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். தமிழிலும் சிவகார்த்திகேயனின் வேலைக்கரன் மூலம் அறிமுகமாகி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்போது தமிழில் ரஜினியின் வேட்டையன், வடிவேலுவுடன் மாரீசன், தெலுங்கில் அல்லு அருஜூனின் புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஃபகத் ஃபாசில், ADHD (Attention deficit hyperactivity disorder) எனப்படும் கவனக்குறைவு அல்லது அதிக செயல்பாடு குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 26ஆம் தேதி, கேரளாவின் கொத்தமங்கலம் பகுதி அருகே உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார். அப்போது பேசிய அவர், “இந்த இடத்தை நான் சுற்றிப் பார்க்கும் போது, சபித் என்னுடன் வந்தார். அவரிடம் ADHD எனப்படும் நரம்பியல் குறைபாடு உள்ளது. அதைக் குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன். குழந்தை பருவத்தில் கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்த முடியும் என்றார். 41 வயதில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியுமா என்றேன். பின்பு எனக்கு ADHD இருப்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டது. அது பெரியதாக இல்லாவிட்டாலும், எனக்கும் சில குறைபாடுகள் உள்ளன” என்றார். 

ஏ.டி.எச்.டி (ADHD) என்பது ஒரு மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது குறைபாடே ஆகும். இது பொதுவாக குழந்தைப் பருவத்தில் கண்டறியப்படுகிறது. ஏ.டி.எச்.டி உள்ள குழந்தைகளுக்கு கவனம் செலுத்துதல், அதிக சுறுசுறுப்பு மற்றும் அவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். இதை குணப்படுத்த முடியாது, ஆனால் அதைச் சிகிச்சை மற்றும் மருந்து மூலம் சமாளித்துக் கொள்ள முடியும்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ஃபகத் ஃபாசில் படம் 

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
fahad faasil aavesham movie enters 100 crore club

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், சஜின் கோபு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆவேஷம். நஸ்ரியா நசிம் மற்றும் அன்வர் ரஷீத் தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஃபகத் ஃபாசிலின் நடிப்பை சமந்தா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றார்.  

அதன் காரணமாக வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் ஆவேஷம் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 7வது படமாக இப்படம் இருக்கிறது. இதற்கு முன்பாக மஞ்சும்மல் பாய்ஸ்,  2018 , புலிமுருகன், ஆடுஜீவிதம், பிரேமலு, லூசிஃபர் உள்ளிட்ட படங்கள் இணைந்தது. 

fahad faasil aavesham movie enters 100 crore club

சமீப காலமாக மலையாள சினிமாக்கள் கேரளாவைத் தாண்டி மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு என அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட்படங்களாக வெளியாகி வருகிறது. இந்த ஹிட் லிஸ்டில் தற்போது ஆவேஷமும் இணைந்துள்ளது. அதோடு ஃபகத் ஃபாசில் நடித்த முதல் படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது. 

Next Story

ஃபகத் ஃபாசில் படத்தில் இணையும் எஸ் ஜே.சூர்யா - எகிறும் எதிர்பார்ப்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
sj surya fahad fazil movie tpdate

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விக்ரமின் 62வது படத்தையும், தனுஷின் ராயன் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதில் ராயன் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிட்டது. விக்ரமின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழைத் தாண்டி தெலுங்கிலும் நானி நடிக்கும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த எஸ்.ஜே சூர்யா, தற்போது மலையாளத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் விபின் தாஸ் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபகத் ஃபாசில் தற்போது தமிழில் ரஜினியின் வேட்டையன், வடிவேலுவுடன் மாரீசன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேஷம் படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த சூழலில் ஃபகத் ஃபாசிலுடன் எஸ்.ஜே.சூர்யா இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.