Skip to main content

“உடற்பயிற்சி என்பது வியாபாரம் ஆகிவிட்டது” - கார்த்தி

 

“Exercise has become a business” - Karthi

 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா ஃபிசிக்கல் பிட்னஸ் குறித்து எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்.

 

நிகழ்வில் கார்த்தி பேசியதாவது: எல்லோருக்கும் உடல் பற்றிய அறிவிருக்கிறது. உடற்பயிற்சி செய்கிறார்கள். உணவுமுறைக்கென்றும் உடற்பயிற்சிக்கென்றும் தனிப்பட்ட முறையில் ட்ரெய்னர் வைத்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது. 

 

நம்மூரில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலைக்கு தகுந்தது போல, உணவுமுறைக்கு ஏற்ப எதுவும் சொல்லப்படவில்லை. அதான் நம்ம ஊர்ல வளர்ந்த பொண்ணு நம்மளோட உணவுமுறை பழக்கவழக்கங்களிலிருந்து நாம எப்படி ஃபிட்டாக இருக்கலாம் என்பதைப் பற்றி புத்தகம் எழுதியிருக்கு. இங்கே உடற்பயிற்சி என்பது பெரிய தொழிலாகவும் வியாபாரமாகவும் மாறி வெகுநாட்களாகிறது.

 

எங்க அண்ணனோட உடல் மாதிரி எனக்கு வராது. ஒவ்வொருவரின் உடல்வாகும் வித்தியாசமானது என்பதைத்தான் இந்தப் புத்தகம் புரிய வைக்கிறது. 

 


 

சார்ந்த செய்திகள்