Skip to main content

'எல்லாம் கிருபை கிருபை கிருபை...' - கவனம் ஈர்க்கும் அசோக் செல்வன் பட ட்ரைலர்

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

'Everything is kirubai ...' - Attractive Ashok Selvan movie trailer

 

மன்மத லீலை படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் 'ஹாஸ்டல்'. அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். சதீஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.  இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. வரும் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாகிறது.

  

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை ஜி.வி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டல் வாழ்க்கையை காமெடி கலந்த திகில் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. 2015-ல் மலையாளத்தில் வெளியான 'அடி கப்யரே கூட்டமணி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அசோக் செல்வன் நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
ashok selvan new movie update Emakku Thozhil Romance

அசோக் செல்வன் ப்ளு ஸ்டார் பட வெற்றியை தொடர்ந்து தற்போது நோஹா ஆபிரஹாம் இயக்கத்தில் கேங்க்ஸ் என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இத்தொடருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இதனை தொடர்ந்து ப்ரியா இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடித்துள்ளார். இதில் வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி, ஆர்யா ஆகியோர் அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். படத்திற்கு ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கும் இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா கதாநாயகியாக நடிக்கிறார். திருமலை தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.  

இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

“வேதனை, வருத்தம்” - வசந்த் ரவி புலம்பல்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
vasanth ravi about pon Ondru Kanden World Satellite Premiere announcement

தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வசந்த் ரவி. இதையடுத்து வெப்பன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.  

இதனிடையே கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதில் அசோக் செல்வன், மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு தனியார் தொலைக்காட்சி பட ப்ரோமோவை வெளியிட்டது. அதில் திரையரங்கிற்கு முன் சின்னத்திரையில் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.  

இந்த நிலையில் வசந்த் ரவி, எங்களிடம் தொடர்பு கொள்ளாமல் சின்னத்திரையில் வெளியாவது குறித்து தனியார் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு. அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ப்ரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் பொன் ஒன்று கண்டேன் பட ப்ரோமோவையும் சின்னத்திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும், பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை.

நடிகர்களுக்கு தயாரிப்பாளரின் வணிக ரீதியாக எடுக்கும் முடிவுகளில் கருத்து சொல்ல உரிமை இல்லை. ஆனால், அவர்களுக்கு இது போன்ற அறிவிப்புகளை குறைந்தபட்ச மரியாதையாக தெரியப்படுத்துங்கள். இது போல் சமூக வலைத்தளங்கள் மூலமாக அல்ல” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சில மணி நேரங்களில் பட ப்ரோமோவை அந்த தனியார் தொலைகாட்சி நீக்கியுள்ளது.