Skip to main content

“அழகாக இருக்கிறது” - துஷாரா விஜயன் நன்றி

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

dushara vijayan thanks note for aneethi response

 

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் 'அநீதி'. இப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார் வசந்த பாலன். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

 

இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன், இந்த படத்திற்காக கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு சவால் நிறைந்த மற்றும் ஒரு கலைஞனாக எனது வளர்ச்சிக்கு உதவும் கதாபாத்திரங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் திரையுலகில் எனது பயணத்தைத் தொடங்கினேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, புதிய களங்களை ஆராயவும், புதிய கதாபாத்திரங்களில் வாழவும், அவர்களின் கதைகளுக்கு உயிர் கொடுக்கவும் எனக்கு சில அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தது. 

 

அந்த வகையில் இன்னொரு நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் அநீதி படத்தில் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. அதனை மக்கள் பாராட்டுவதை பார்க்கும் போது அழகாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் "அனைவரின் ஆதரவும் ஊக்கமும் என்னை மேலும் கடினமாக உழைக்கவும் எதிர்காலத்தில் இன்னும் சிறந்த நடிப்பை கொடுக்கவும் தூண்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சினிமாவில் இருந்து விலகும் துஷாரா விஜயன்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Dushara Vijayan to retire from cinema!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வலம் வருபவர் துஷாரா விஜயன். இவர் கடந்த 2019ஆம் வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்தார். இப்படத்தில், மாரியம்மா கதாபாத்திரத்தில் தனது அபரிவிதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் துஷாரா விஜயன். அந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக துஷாரா விஜயன் பார்க்கப்பட்டார். 

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில்  துஷாரா விஜயன் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றியிருந்தாலும், அவர் ஏற்றியிருந்த ரெனே கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு, ‘கழுவேத்தி மூர்க்கன்’, அநீதி ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்திலும், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘வேட்டையன்’ படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும், ‘வீர தீர சூரன்’ படத்தில் துஷாரா விஜயன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

துஷாரா விஜயன் நடிப்பில் வருகிற ஜூலை 26ஆம் தேதி  வெளியாகவிருக்கும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த விழா முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா விஜயன், “என்னுடைய 35 வயதில் நான் திரையுலகில் இருந்து விலகிவிடுவேன். அதன் பிறகு நடிக்க மாட்டேன். 35  வயதுக்கு பிறகு, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“வாடிவாசல் லிங்குசாமி பண்றதா இருந்தது” - வசந்த பாலன் சுவாரஸ்யம்

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
vasantha balan said lingusamy to direct vaadivaasal

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த பாலன் இப்போது ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸீன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரையிலர் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரிஸ் கடந்த 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ் தொடர்பாக நக்கீரன் ஸ்டியோ யூட்யூபில் பேசிய வசந்த பாலன், பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது சக இயக்குநர்களோடு படங்கள் குறித்து பேசியது தொடர்பாக பகிர்ந்த வசந்த பாலன், “ஷங்கர், லிங்குசாமி, சசி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் இவங்களோட எப்போதுமே தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பேன். இந்தி சினிமாவுடைய வீழ்ச்சி, கே.ஜி.எஃப்புடைய வெற்றி எனப் பல்வேறு பார்வையில் சினிமாவின் இப்போதைய நிலைகுறித்து விவாதிப்பேன். அதன் மூலம் ஒரு விஷயத்தை கண்டடைய முடியும்.  

பூமணியின் வெக்கை நாவலை நான் படம் பண்ண வேண்டியிருந்தது. ஒரு அப்பா கொலை பண்ண பையனை காப்பாத்த போராடுறாரு, கடைசியில கோர்டுல சரணடைஞ்சிடுவாரு. இதை எப்படி படமா பண்றதுன்னு பண்ணாம விட்டுட்டேன். ஆனால் அசுரன் பார்த்தவுடன் சர்பிரைஸா இருந்துச்சு. நாவலை திரைக்கதையா வெற்றிமாறன் எப்படி அணுகியிருக்கிறார் என்பதைப் பார்த்தேன். 

அடுத்து வாடிவாசல் பண்ண போறார். வாடிவாசல் முதலில் லிங்குசாமி பண்றதா இருந்தது. அப்புறம் நம்ம ட்ரை பண்ணுவோம் எனத் திரைக்கதை அமைக்க முயற்சி செய்தேன். வெறும் ஜல்லிக்கட்டை வைத்து எப்படி திரைக்கதை அமைக்க முடியும் என அப்போது விட்டுவிட்டேன். இன்னைக்கு தமிழ் சினிமா எதிர்பார்க்கிற படமாக அது மாறியிருக்கு. இவ்வாறு தொடர்ந்து இயக்குநர்களுடன் ஃபோனில் படங்கள் குறித்து பல்வேறு விஷங்கள் பேசுவேன்” என்றார்.