Skip to main content

கமல் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான்

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

dulquer and jayam ravi to act with kamal in his 234movie

 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் கமலின் 233வது படமாக உருவாகிறது. சமீபத்தில் இப்படத்திற்காகத் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

 

இதையடுத்து தனது 234வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே மகேஷ் நாராயணன், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார். 

 

முன்னதாக இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் பின்பு பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்னர் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கதாநாயகியாக பல ஹீரோயின்களின் பெயர்கள் பேசப்பட்ட நிலையில் தற்போது த்ரிஷாவே இறுதிசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

The website encountered an unexpected error. Please try again later.