Skip to main content

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் 'ஹர்காரா'

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

dream pictures released harkara

 

காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் பற்றி சொல்லும் படம் 'ஹர்காரா'. இப்படத்தில் கதாநாயகியாக கௌதமி, முக்கிய கதாபாத்திரங்களில் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

 

ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தை இயக்கியும் உள்ளார். இவர் ‘வி 1 மர்டர் கேஸ்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர். இப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

 

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக் கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன், அங்கு படும் அவஸ்தையையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்