Skip to main content

"காலேஜ் பசங்க எவ்வளவு என்ஜாய் பண்ணுவாங்களோ, அதே அளவிற்கு..." -  'டான்' பட இயக்குநர் பேட்டி 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

Don Director Cibi

 

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் டான் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"டான் படத்தின் கதையை 2014ஆம் ஆண்டிலேயே எழுதினேன். இந்தக் கதையைத்தான் முதல் படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்ததால் நிறைய மாற்றங்கள் செய்து கதையின் இறுதிவடிவத்தை உருவாக்கினேன். சிவகார்த்திகேயன் சாருக்கு கதை பிடித்திருந்ததும் படத்தின் வேலைகளைத் தொடங்கினோம். ஆஃப் ஸ்க்ரீனில் சிவகார்த்திகேயன் எப்படி இருப்பாரோ அதே மாதிரியான கேரக்டர்தான் அவருக்கு படத்திலும். அதனால் ரொம்பவம் ஈஸியாக படத்தில் நடித்தார். என்னுடைய ரியல் லைஃப்ல இருந்தும் சில சம்பவங்களை எடுத்து கதையில் வைத்திருக்கிறேன். எல்லோரும் ஈஸியா கனெக்ட் பண்ணிக்கிற மாதிரியான படமாக டான் இருக்கும். இந்தப் படம் காலேஜ் பற்றிய படம் என்பது மாதிரியான தோற்றம் எல்லோரிடத்திலும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் படத்தை காலேஜ் பசங்க எவ்வளவு என்ஜாய் பண்ணுவாங்களோ, அந்த அளவிற்கு பேமிலி ஆடியன்ஸும் என்ஜாய் பண்ணுவதற்கான விஷயங்களும் உள்ளது. 

 

சிவகார்த்திகேயனின் நடிப்பு பெரிதும் கவனிக்கப்படும். பள்ளிக்கூடம் சம்மந்தப்பட்ட ஒரு காட்சியில் பிரியங்கா மோகன் ரொம்பவும் சிறப்பாக நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, பாலா, ராதாரவி, சிங்கம் புலி, காளிவெங்கட் என பெரிய பட்டாளமே படத்தில் உள்ளது. அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டான், படம் பார்ப்பவர்களுக்கு எந்தவிதத்திலும் ஏமாற்றத்தை தராது. வழக்கமான ஹீரோ, வில்லன்களுக்கு இடையேயான கதையாக இல்லாமல் ரொம்பவும் சிம்பிளான கதை. நம் வாழ்க்கையில் சந்தித்த நபர்களையும் நம் வாழ்க்கையையும் திரும்ப பார்க்க கூடிய படமாக இப்படம் இருக்கும். நல்ல படம் பார்த்த திருப்தியோடு வெளியே வரலாம் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிருத்தை பாராட்டிய 'பாகுபலி' பிரபலம்

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

'Baahubali' musi director M. M. Keeravani praised Anirudh

 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். சமீபத்தில் இவர் இசையில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'டான்' மற்றும் 'விக்ரம்' படங்களின் பாடல்கள் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இது தொடர்பாக அனிருத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். 

 

அந்த வகையில் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி அனிருத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கீரவாணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டான் படத்தில் இடம்பெற்ற 'பே' பாடல் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. அனிருத் எப்போதுமே புதுமையானவர்" என குறிப்பிட்டுள்ளார். கீரவாணி, தமிழில் 'மரகதமணி' என்ற பெயரில் 'நான் ஈ', 'மாவீரன்' உள்ளிட்ட சில வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

“பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள்” - டான் படத்திற்கு ராமதாஸ் ரிவ்யூ!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

ramadoss Praise sivakarthikeyan don movie

 

'டாக்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாகப் பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தைத் திரையரங்குகளில் கொண்டாடினர். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில்  அழைத்துப் பாராட்டியிருந்தார்.

 

இந்நிலையில்  பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்தேன், ‘பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள்’ என்ற பாடத்தைச் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.