Skip to main content

"விஜய் சார் பாராட்டியது பெரிய நம்பிக்கையை கொடுத்தது" - 'டான்' இயக்குநர் நெகிழ்ச்சி 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

Don Director Cibi

 

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் உதவி இயக்குநராக தான் பணியாற்றிய நாட்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

தெறி, மெர்சல் படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்துவிட்டு படம் பண்ண முயற்சி செய்துகொண்டு இருந்தேன். 5 வருட முயற்சிக்கு பிறகு தற்போது டான் படம் பண்ணி, படம் ரிலீஸ் ஆகப்போகிறது. முதல் படத்திலேயே சிவகார்த்திகேயன், அனிருத், லைக்கா ப்ரொடக்ஷன்ஸ், எஸ்.கே.ப்ரொடக்சன்ஸ் என பெரிய காம்போ அமைந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. தெறி, மெர்சல் படங்களில் வேலை பார்த்தபோது நிறைய கற்றுக்கொண்டேன். மெர்சல் படத்தில் திருவிழா காட்சியில் 2000 பேரை செட் செய்யும் பொறுப்பை என்னை நம்பி அட்லீ வழங்கினார். இதை இப்படி செய்யக்கூடாது, இப்படி செய்யவேண்டும் என நிறைய ஆலோசனைகள் கூறுவார்.

 

நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள அது உதவியது. நான் அசிஸ்டன்ட்டாக வேலை பார்த்த இரண்டு படமுமே விஜய் சார் படமென்பதால் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் எடுத்த பைலட் படம் பார்த்துவிட்டு ரொம்பவும் நல்லா இருக்கு என்று விஜய் சார் சென்னார். அவர் பாராட்டியது எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. விஜய் சார், அட்லீ சார், மகேந்திரன் சார் பாராட்டியது எல்லாம்தான் மிகப்பெரிய நமபிக்கையை எனக்கு கொடுத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிருத்தை பாராட்டிய 'பாகுபலி' பிரபலம்

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

'Baahubali' musi director M. M. Keeravani praised Anirudh

 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். சமீபத்தில் இவர் இசையில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'டான்' மற்றும் 'விக்ரம்' படங்களின் பாடல்கள் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இது தொடர்பாக அனிருத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். 

 

அந்த வகையில் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி அனிருத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கீரவாணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டான் படத்தில் இடம்பெற்ற 'பே' பாடல் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. அனிருத் எப்போதுமே புதுமையானவர்" என குறிப்பிட்டுள்ளார். கீரவாணி, தமிழில் 'மரகதமணி' என்ற பெயரில் 'நான் ஈ', 'மாவீரன்' உள்ளிட்ட சில வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

“பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள்” - டான் படத்திற்கு ராமதாஸ் ரிவ்யூ!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

ramadoss Praise sivakarthikeyan don movie

 

'டாக்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாகப் பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தைத் திரையரங்குகளில் கொண்டாடினர். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில்  அழைத்துப் பாராட்டியிருந்தார்.

 

இந்நிலையில்  பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்தேன், ‘பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள்’ என்ற பாடத்தைச் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.