DNA movie Shooting Wrapped

Advertisment

‘ஒருநாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்துக்கு ‘டிஎன்ஏ’ எனத்தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர்கள் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளரின் பெயர் முதல் தோற்றத்தில் இடம்பெறவில்லை. அதனால் இசையில்லாமல் உருவாகும் புது முயற்சி கொண்ட படமா? அல்லது மறந்து பெயர் விடுபட்டதா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்திருக்கிறது என்பதை குழு புகைப்படம் வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.