Skip to main content

"தோழா' பட சென்டிமென்டை கைவிடாத வம்சி... 'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்?

 

director Raju Murugan Dialogues write in thalapathy66 movie

 

சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'தளபதி 66' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் நல்ல குடும்ப படமாக இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் 'தளபதி 66' படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'தளபதி 66' படத்திற்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 'ஜோக்கர்', 'குக்கூ', 'ஜிப்ஸி' போன்ற படங்களை இயக்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். ஏற்கனவே வம்சி இயக்கத்தில் வெளியான 'தோழா' படத்திற்கும் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்