Skip to main content

படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பிரபல இயக்குநர்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

diirector naga hospitalized

 

சின்னத்திரையில் பிரபலமான பல தொலைக்காட்சி தொடர்களை எடுத்தவர் இயக்குநர் நாகா. மேலும் பெரிய திரையில் நந்தா, சாயா சிங் நடிப்பில் வெளியான 'ஆனந்தபுரத்து வீடு' படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஒளிப்பதிவாளராக 2 இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். 

 

இப்போது வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அனுமதித்தனர். அவரை சோதித்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இப்போது உடல் நலம் தேறி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
sayaji shinde admitted to hospital

மராத்தி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழில் 'பாரதி' படத்தில் சுப்ரமணிய பாரதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்பு 'பூவெல்லாம் உன் வாசம்', 'பாபா' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்திலும், 'தூள்', 'வெடி' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார். 

இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இயற்கையின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார். இதற்காக 2015 ஆம் ஆண்டு சஹ்யாத்ரி தேவ்ரையின் என்ற அமைப்பை ஏற்படுத்தி பசுமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இது அவர் தற்போது வாழ்ந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது. 

இந்த நிலையில் ஷாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அவரை உடனடியாக அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிரா சதாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இதயத்தில் ஒரு சில அடைப்புகள் இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நலமுடன் இருப்பதாக அவரே மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.