Skip to main content

தனுஷின் 'வாத்தி' - ட்ரைலர் அப்டேட் கொடுத்த படக்குழு

 

dhanush vaathi movie trailer update

 

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

 

படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அனைத்து பாடல்களும் தற்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 8 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ட்ரைலருக்கு தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்