Skip to main content

தென்னிந்திய சினிமாவில் யாருமே செய்யாத சாதனையை முதன் முறையாக செய்த தனுஷ்....

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரௌடி பேபி என்ற பாடல் யூ-ட்யூபில் வெளியானது முதல் செம வைரலாகி வருகிறது. வெளியான ஆறு மாதத்திலேயே 500 மிலியன் பேர் இந்த பாடலை பார்த்திருப்பது சாதனையாகியுள்ளது.
 

rowdy baby

 

 

மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தான் இந்த மாரி 2 படத்தையும் இயக்கியுள்ளார். கடந்த படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த அனிருத் இல்லாமல் இந்த பாகத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணிபுரிந்தார். மேலும் ரௌடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி தீ என்ற பெண் பாடலருடன் இனைந்து பாடினார். படம் வெளியாகுவதற்கு முன்பே இந்த பாடல் செம ஹிட் அடித்தது. பலரும் இது வீடியோவாக பார்க்க எப்படி இருக்கும், டான்ஸ் எப்படி இருக்கும் என்று ஆவலுடன் இருக்க பிரபுதேவா இந்த பாடலுக்கு நடன இயக்குனர் என்று சொன்னதும் மேலும் ஆவல் கூடுதலானது.
 

இப்படி ஆவலை கூட்டிக்கொண்டே இருந்த இந்த பாடலின் வீடியோ அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் வெளியானது. படம் வெளியானவுடனேயே இந்த பாடலின் வீடியோ யூ-ட்யூபில் வெளியானது. இதனை அடுத்து மலமலவென இந்த பாடல் உலகம் முழுக்க வைரலாக தற்போது ஐந்தே மாதங்களில் 500 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. அதாவது உலகம் முழுக்க 50 கோடி பேரால் பார்க்கப்பட்டடுள்ளது.
 

தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பாடல் ஒன்று  50 கோடி வியூஸ் பெற்றுள்ளது இதுவே முதன் முறையாகும்.  இதே நிலை இந்த பாடலுக்கு நேர்ந்தால் 1 பில்லியன் வியூஸ் கூட அசால்ட்டாக கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைக்கு வரும் ராயன் படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Release date announcement on Raayan film

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் ஏராளமான படங்கள் வைத்துள்ளார். 

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. 

மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இப்படம், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தோடு ஜூன் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ராயன் படம் எதிர்பார்த்த தேதியில் வெளிவரவில்லை. 

இந்த நிலையில், இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதில், ராயன் படம் வரும் ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Next Story

சர்ச்சை வீடியோ; ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நாகர்ஜுனா!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Nagarjuna apologized to the fan

தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் ‘குபேரா’ படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பிற்காக தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகர்ஜுனாவிடம், அங்கிருந்து முதியவர் ஒருவர் அருகில் வந்து பேச முயன்றார். அப்போது, நாகர்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை கவனிக்காமல் நாகர்ஜுனாவும் அங்கிருந்து சென்றார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது நாகர்ஜுனா அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் அந்த வீடியோவை பகிர்ந்து, ‘இது இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது கண்டிப்பாக நடந்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.